search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு
    X

    குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு

    தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது.
    கற்றல் குறைபாடு என்பது மூளையில் உள்ள செல்களின் பிணைப்பில் உண்டாகும் பிரச்சினை. கற்றல் குறைபாடு நோய் கிடையாது, ஆகையால் குணப்படுத்த முடியாது ஆனால் இதனை கையாள முடியும்.

    தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள் மூலம் மட்டுமே இதனை கையாள முடியும். அதிக நேரம் டியூஷன் சென்று படிப்பதாலோ அல்லது 20 முறை எழுதி பார்ப்பதாலோ கல்வி கற்றுக்கொள்ள இயலாது.

    தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது. பத்தில் நான்கு குழந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கியுள்ளனர்.

    இந்த குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ,சமூகத்திலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் ஒரு உண்மை என்னவென்றால் பத்தில் ஏழு சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னை யாரும் அங்கீகரிக்காத நிலையால் இறுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    “நீ புத்திசாலியான பையன் தானே, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் நன்றாக மதிப்பெண் பெறலாமே” என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனதில் தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவனின் சுய மதிப்பு குறையத்தொடங்கும்.

    டீசல் வண்டியில் பெட்ரோல் நிரப்பினால் என்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாதல்லவா, அதேமாதிரி தான் சாதாரண பள்ளிகளில் கற்பித்தால் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் மூளைக்குள் சென்றடையாது. சிறப்பு பயிற்சி மேற்கொள்வதினால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும் !!

    அவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு சிறப்பு கல்வியாளர் என்ற விகிதாச்சாரத்தின் மூலம் தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அதில் முக்கியமாக ஐம்புலன்கள் வழிமூலமாக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி சிறந்த பயிற்சி முறையாகும்.

    பெற்றோர்கள் அணுக வேண்டியவர்கள்:

    குழந்தைக்கு கற்றல் குறைபாடுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரை பார்த்து குழந்தையின் படிப்பு மற்றும் நடத்தையை பற்றி கேட்டறிதல் வேண்டும். பின்பு குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்., மனநல ஆலோசகரை அனுகி குழந்தையின் மனநிலை தொடர்பான அறிக்கை பெறுவது அவசியம்.

    ஆய்வு அறிக்கை :

    1. ஐ கியூ டெஸ்ட் (அறிவு திறன்)


    2. குடும்பத்தில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கிறதா, சொந்தத்தில் திருமணமா ? தாய் கர்பமாக இருக்கும் பொழுது உடல் மற்றும் மன நலன், பிரசவத்தின் பொழுது ஏதாவது சிக்கல், பிறந்தவுடன் அழுகை மற்றும் எடை, ஒவ்வொரு
    மைல்கல்லின் வளர்ச்சி, உதாரணமாக கழுத்து நின்றது, தவழ்வது,முட்டி போடுவது, நடப்பது, பேசுவது, மற்றும் பல.

    3. படிப்பது, எழுதுவது

    4. குழந்தையின் மன நலன்.

    இந்த மனநிலை தொடர்பான அறிக்கையின்படி தற்பொழுது குழந்தை எந்த வயதிற்கானவளர்ச்சியில் உள்ளது என்று கண்டறிந்து பின்னர் அதற்கு தகுந்தவாறு சிறப்பு கல்வியாளரிடம் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் !!

    ஐம்புலன்கள் வழியாக கற்றுக் கொள்ளும் முறை:

    ஒரு குழந்தைக்கு எந்தப் புலன் வழியில் சிறந்த முறையில் கற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து அந்த முறையிலேயே கற்பித்தால் அந்த குழந்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும்.

    * புலன் சார்ந்த கல்வி :

    புலன் வழி கல்வி என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்களை பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்க முடியும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்றலில் முன்னேற்றம் ஏற்பட அவர்களுக்கு எந்த புலத்தின் மூலம் கற்பித்தால் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அதனை அறிந்து அதன் மூலம் கற்பிக்கலாம். இவ்வாறு கற்பிக்கப்படுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வமும் திறமையும் அதிகரித்து அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும்.



    * காட்சிப் பொருளின் மூலம் கற்றல்


    அதாவது குழந்தைகள் படங்கள், ஓவியம், அல்லது பொருட்களை பார்த்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். படிக்கும் பாடங்களை
    பாட்டு, இசை, நடனம் மூலமாக நேராகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் ஞாபக திறனும் மேம்படும்.

    * கேட்டலின் மூலம் கற்றல்

    கற்பிப்பதை ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு யோசிக்கும் திறனும் ஆர்வமும் அதிகமாகும். திரும்பத் திரும்ப ஒரு செய்தியினை கேட்டால் அது நன்றாக மூளையில் பதிந்து விடும். பொதுவாக குழந்தைகள் படிப்பதைவிட கேட்டலில் ஆர்வம் காட்டுவார்கள் உதாரணமாக ஆசிரியர் கதை சொன்னால் மாணவர்களின் கவனம் சிறிதுகூட சிதறாது.

    அதேபோன்று தொலைக் காட்சியிலோ வானொலி பெட்டியிலோ கதையோ செய்தியும் கேட்கும்போது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக மிக அதிகமாக இருக்கும் இவற்றை அறிந்து அந்த குழந்தைகளுக்கு கேட்டல் மூலம் கற்பிக்கலாம் கற்பிக்கப்படும் பொருளை பதிவு செய்து அதை கேட்டலின் மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்

    தொடு உணர் கல்வி


    வீட்டில் உள்ள உப்பில் விரல்களால் எழுதுதல், எழுத்துக்களை வடிவமைத்தல் அதனைத் தொட்டுப் பார்த்தல் , நவதானியங்களை கொண்டு படங்களை உருவாக்கி அதனை தொட்டு விரல்களால் உணர முடியும். விரல்களை தண்ணீரில் ஈரப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சுவர்கள் மேல் எழுதி, அந்த எழுத்துக்கள் மறைவதற்குள் மற்றொரு எழுத்து எழுத வேண்டும். இதை ஒரு விளையாட்டுப்போல் கற்றுக் கொள்வார்கள். இவ்வாரு தொடு உணர்வின் மூலம் கற்றுக் கொடுப்பது கற்றலின் புதிய யுக்தி.

    உடல் அசைவின் மூலம் கற்றல்

    துரு துரு குழந்தைகளுக்கு இந்த வகை கற்றல் ஒரு வரப்பிரசாதம். உடல் அசைவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வகை கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கவனம் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும், நடனம் மற்றும் நாடகத்தில் இருக்கும் ஆர்வத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு தூண்டுதலாக அமையும்.

    மூளை உடற்பயிற்சி (பிரைன் ஜிம்)

    இந்த வகை கற்றலில் உபயோக படுத்தலாம். தோப்பு கர்ணம் தண்டனைகாக உபயோக படுத்தப்படுத்தப்பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் இது ஒரு வகையான மூளை உடற்பயிற்சி என்று வெளிநாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இடது - வலது பக்க மூளை தூண்டப்படுவது பிரைன் ஜிம் என்று பொருள். இரண்டு பக்க மூளையையும் செயல்படுத்துவதன் மூலம் கவனம் மேம்படும், புத்தி கூர்மை அடையும், ஞாபக சக்தி மெருகேரும், மூளை புத்துணர்ச்சி அடையும் மற்றும் புதிய நியூரான்களை உருவாக்க உதவும்.

    பெற்றோர்களுக்கு : (பரம்பரையில் கற்றல் குறைபாடு )


    பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்த்து பதற்றப்பட கூடாது .ஆறு வயது வரை குழந்தைகளுக்கு கற்று உணரும் பருவம். பள்ளிக்குச் செல்லும் முன்னே இதற்கான சில அறிகுறிகள் தெரியும். இருந்தாலும் பள்ளி சென்றால்தான்படிப்பதில் பிரச்சினை இருக்கிறதா மற்றும் , யாரை அணுக வேண்டும் என்பதையும் அறியமுடியும். கற்றல் குறைபாடு மரபனு சார்ந்ததாக இருப்பதால் விரைவிலேயே கண்டறிந்து மாற்று வழி சிறப்பு பயிற்சி அளிப்பது மிக அவசியம்.

    பெற்றோர்கள் கவனத்திற்கு:

    என் குழந்தை எல்லா பாடத்திலும் நன்றாக படிப்பானா , கற்றல் குறைபாட்டிலிருந்து விடுபட்டு விடுவானா ? எவ்வளவு சீக்கிரம் இந்த குறைபாட்டை சரிப்படுத்த முடியும்? இந்த குறைபாடு போகப் போக சரியாகி விடுமா?

    இப்படி பல கேள்விகளை சிறப்பு கல்வி யாளரின் முன் பெற்றோர்கள் வைப்பார்கள். குழந்தையின் குறைபாட்டிற்கு தகுந்தவாறு பயிற்சி வகுப்புகள் அமையும்.

    பயிற்சிக்கான கால நேரம் குறிப்பிடுவது கடினம். பெற்றோர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் தன் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.மேலும் பயிற்சிகளை பாதியில் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பது மிக மிக அவசியம் !! 
    Next Story
    ×