search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா? பெற்றோர்களே கவனம் தேவை
    X

    குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா? பெற்றோர்களே கவனம் தேவை

    குழந்தைகள் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர். இது பின்னாளில் குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
    குழந்தைப் பருவத்தில் தான் களிமண்ணை பொம்மையாக வடிவமைப்பது போல, குழந்தையின் தூய மனது தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பல விஷயங்களை கற்றுக் கொண்டு ஒரு முழு மனிதனாக மாறுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர். அவ்வாறு குழந்தைகள் சிறு பிராயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை நண்பன் எனும் விஷயம் அவர்களை பின்னாளில் எப்படி பாதிக்கிறது, குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது போன்ற தகவல்களை பார்க்கலாம்.

    குழந்தைகளுக்குக் கற்பனை நண்பன் என்பது அவர்களுக்குப் பிடித்த பொம்மைகள், அல்லது செல்லப் பிராணிகள், பொருட்கள் போன்றவை தான். சமயங்களில் யாருமே இல்லாமல் வெற்றிடங்களைப் பார்த்துக் கூட அவர்கள் பேசத் தொடங்கலாம்.

    குழந்தைகள் பொம்மை, பிராணிகள், பொருட்கள் போன்ற இந்த விஷயங்களை தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாக, உற்ற நண்பனாகக் கருதி அவர்களுடன் தனது அனைத்து இரகசியங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வர்.

    குழந்தைகளின் கற்பனை நண்பன் உருவாகும் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

    ஒன்று குழந்தை இருக்கும், வளரும் சூழல்,

    மற்றொன்று குழந்தையின் உணர்வுகள். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் தான் தனக்கென ஒரு நண்பனைத் தானே உருவாக்கிக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறார்கள் அது எப்படி என விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.



    குழந்தைகளின் இந்தக் கற்பனை நண்பன் எனும் இந்த விஷயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால், குழந்தைகளுக்கு விளையாடத்துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது அவர்கள் தங்கள் சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விஷயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.

    குழந்தைகள் வெளி மனிதர்களோடு பேசிப் பழக தயக்கமாக உணரும் பொழுது, குழந்தைகளில் தன்னம்பிக்கை குன்றிக் காணப்படும் பொழுது, அவர்கள் பார்த்த படங்கள் மற்றும் கேட்ட கதைகளினால் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாறுபாடுகள், படங்களில் அல்லது மற்ற குழந்தைகள் பொம்மைகளைத் தங்கள் நண்பனாகக் காட்டி பேசுவதைப் பார்த்துத் தானும் முயற்சித்தல் போன்ற உணர்ச்சிகளின் காரணமாகக் கூட குழந்தைகள் தங்களுக்கென கற்பனையாக ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    குழந்தைகளுக்குச் சற்று விவரம் தெரியும் பருவமான இரண்டு வயதினில் இந்தக் கற்பனை நண்பன் பழக்கம் குழந்தைகளில் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், குழந்தைகளின் இரண்டு அல்லது இரண்டரை வயது முதல் ஒன்பது வயது வரையிலான கால கட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ள முயல்வர்.

    குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த மற்றும் விருப்பமான விஷயங்களின் அடிப்படையில் தனது நண்பனை உருவாக்கிக் கொள்வர். இந்தக் கற்பனை நண்பன் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடையே வேறுபடும். ஆண் குழந்தைகள் தங்கள் சக்திக்கு இணையாக அல்லது தங்களை விட சக்தி வாய்ந்தவனாக இருக்கும் ஒருவனை நண்பனாக வைத்துக் கொள்வர்,

    அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொம்மையை அவ்வாறு பலசாலியாக எண்ணிக் கொண்டு பழகுவர். பெண் குழந்தைகள் தங்களை விட அறிவு மற்றும் பலத்தில் குறைந்த பொருட்களை அல்லது பொம்மையை தங்களது கற்பனைத் தோழியாக எடுத்துக் கொள்வர்.

    குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்பட்டால் அது சாதாரணமே விபரீதம் ஏற்படும் சூழல். ஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீட்டித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுது பார்த்தாலும் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்து வருடன் ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

    குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்த முற்படுங்கள்.
    Next Story
    ×