search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுட்டி ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் டிரஸ்கள்
    X

    சுட்டி ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் டிரஸ்கள்

    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும்.
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் வீட்டை தலைகீழாக மாற்றி விடுவர். முன்பு தீபாவளி பண்டிகைக்கு என ஒருசில மாடல்களில்தான் ஆடைகள் வரும். தற்போது ஆண் குழந்தைகளுக்கு என விதவிதமான ஆடைகள் புதிய வடிவங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல வண்ணச் சேர்க்கையுடன் தனிப்பட்ட இணைப்புகள் கொண்ட ஆடைகள் வருகின்றன. தீபாவளி வரவுகள் என்பது பாரம்பரிய ஆடை, வெஸ்டர்ன், கார்ட்டூன், ஜீன்ஸ், கோட்சூட் என பலவித ரகங்களில் அள்ளி கொள்ளும் வகையில் உள்ளன.

    சுட்டி பசங்க தீபாவளியன்று அணிய பாரம்பரிய ஆடை, பள்ளிகளுக்கு அணிந்து செல்ல வெஸ்டர்ன் என இரண்டு விதமான ஆடைகளை எடுத்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆசை படுகிறதே என பெரியவர்களும் எவ்வளவு விலை அதிகமாக இருப்பினும் வாங்கி தந்து விடுகின்றனர்.

    பாய்ஸ் எத்னிக் ஆடைகள்

    தீபாவளி என்றாலே வண்ணங்ளுக்கு பஞ்சமில்லை. அதில் குழந்தைகள் ஆடைகள் என்றால் எல்லா வண்ணமும் நன்றாகவே நடனமாடும். எத்னிக் ஆடைகள் எனும் பைஜாமா குர்தா, ஷெர் வாணி, வேட்டி சட்டை போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன. இது இந்தியா முழுக்க ஒரே வகையில் அணிய கூடிய ஆடைகளாக இருக்கின்றன.

    வேட்டி சட்டை என்பது தென்னக பகுதியில் அதிகம் விரும்பப்படுகிறது. பைஜாமா குர்தா என்பதில் பேண்ட் பகுதி சுருக்கமான மடிப்புகளுடன், நீளமான குழல் வடிவில், வேட்டி போன்று மடித்து தைக்கப்பட்ட அமைப்பு என்றவாறு வருகிறது. இதன் குர்தா மேல்சட்டை என்பதுதான் அதிக வேலைப்பாடுகளுடன் வருகிறது. இது பருத்தி துணியில் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான குர்தா, குட்டை குர்தா என்ற இரு பிரிவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. பார்க்க பரவசமூட்டும் வண்ண கலவையுடன் சற்று பளபளப்பு தன்மையுடன் சிம்பிள் லுக் சூப்பர் டிரஸ் என்றவாறு பைஜாமா குர்தா கிடைக்கின்றன.

    ஷெர்வாணி என்பது ஆடம்பரமான ஆடை வகை, அதுபோல் சற்று கனமான ஆடையும் கூட. தீபாவளி அன்று அணிய பிரம்மாண்டமான ஆடை. அதிக ஜொலிப்பு மற்றும் பளபளப்பும் கூடிய ஷெர்வாணியின் மேல் சட்டை அமைப்பு கற்கள், மணிகள், எம்பிராய்டரி போன்றவையுடன் பிரம்மாண்ட தோற்ற பொலிவுடன் கிடைக்கின்றன. இதில் தீபாவளிக்கு என புதிய வரவுகள் பல வந்துள்ளன. அவற்றின் உருவ அமைப்பு என்பது கீழ் பகுதியில் மாறுபட்ட வெட்டுக்கள் மற்றும் வளைவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. சில ஷெர்வாணிகள் உட்புற கனமான துணியமைப்பு இன்றி மெல்லிய துணியுடன் எடை குறைந்த ஷெர்வாணியாகவும் உள்ளன. ஷெர்வாணியின் அதிக வேலைப்பாடு கொண்டவை சற்று விலை கூடுதலாகவே காணப்படுகிறது.

    கார்கோ பேண்ட் கலர்புல் ஷர்ட்

    சுட்டி பசங்க போடும் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் சற்று கடினமான துணியில் செய்த கார்கோ பேண்ட் வருகிறது. இது எண்ணற்ற பாக்கெட், கம்பி வளையம், ஜிப்கள், பொருத்தப்பட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கோ பேண்ட்க்கு இணைப்பான பிரிண்டட் சட்டைகள் ஒற்றை நிற பின்னணியில் வடிவமைப்பு செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதற்கு மேல் பகுதியில் அணிய தனிப்பட்ட விஸ்ட் கோட் உள்ளது. கரடுமுரடான அமைப்பும், கலர்புல்லான தோற்ற பொலிவும் இணைந்து பசங்களின் கம்பீரத்தை அதிகரிக்க கூடிய இந்த கார்கோ மற்றும் கலர்புல் ஷர்ட் கோட் ஆடை அதிகம் விரும்பப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ்

    இது இந்திய எத்னிக் போன்றும், அதே நேரம் மாடர்ன் லுக் தரும் வகையில் இரு பிரிவு ஆடை கலப்பாக உள்ளது. இதன் பேண்ட் பகுதி குழல் வடிவில் இறுக பிடிக்கும் வகையிலும், சில மாடல்கள் சுருக்க அமைப்புடன் காணப்படும். மேல் சட்டை என்பது நீளமான மற்றும் குட்டை அமைப்புடன் நீண்ட கைப்பகுதியுடன் ஓர் கம்பீர அமைப்புடன் உருவாக்கம் செய்யப்படும். அதிக தங்க நிற ஜொலிப்புடன் இறுக பற்றும் கழுத்து வடிவமைப்புடன் ஓர் ராயல் தோற்றப் பொலிவை தரும் வகையில் இது உள்ளது. மெத்தென்ற மேல் சட்டை அமைப்பும், மெல்லிய பேண்ட் என்பதும் கலந்த இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ் அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றது. 
    Next Story
    ×