search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்
    X

    குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்

    பெற்றோரும் தங்கள் குழந்தை எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பெற்றோர் செய்யும் சில தவறுகள் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய வழியில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். இப்போது அதிக படியான பெற்றோர் கவனக்குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய விஷயங்களை பார்ப்போம்.  

    * உங்கள் குழந்தையை SIDS - லிருந்து பாதுகாக்க வேண்டும். அது என்ன SIDS என்றால், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி. அதாவது உங்கள் குழந்தை தூங்கும் தொட்டிலில் உங்கள் குழந்தையை தவிர வேறு எந்த பொருளும் இருக்க கூடாது. அதாவது உங்கள் குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது வேறு எந்த குஷனிங் பொருட்களும் இருக்க கூடாது. இவை உங்கள் குழந்தைக்கு சுவாசத்தை தடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் தொட்டிலில் இருந்து இவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய போர்வையை மட்டும் போர்த்திவிடுங்கள், அதுவும் அவர்கள் கழுத்து பகுதி வரை இருக்க கூடாது. அவர்கள் அதை முகத்திற்கு இழுத்துவிட கூடாது என்பதற்காக.



    * உங்கள் சூடான கோப்பை தேநீர், காபி அல்லது வேறு எந்த சூடான பானைத்தையும் குடிப்பதற்கு முன்பே, உங்கள் குழந்தையை நீங்களே தொலைவில் இருக்கும் படி வைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை நீங்கள் கையில் வைத்து கொண்டு குடிக்கும் போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் தற்செயலாக நகர முயற்சிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓட கூட முயற்சிக்கலாம். அப்போது அது தவறி உங்கள் குழந்தையின் மேல் விழுந்து விட கூடாது என்பதற்காக.

    * நீங்கள் உங்கள் குழந்தையை ஷவரில் குளிக்க வைக்க போகும் போது, குழாய் நீரில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். தண்ணீர் முழுவதும் அதே போல வரப்போவதில்லை எனும் போது, ஒரு வாளி தண்ணீரை சேகரித்து, உங்கள் குழந்தையை குளிக்க வைப்பது நல்லது. உங்கள் குழந்தையின் தோல் உங்கள் தோலைவிட மிகவும் மென்மையாக இருப்பதால் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிப்படையும்.

    * ஒரு விபத்து ஏற்படும் போது, காற்று பைகள் (airbags) தாக்கத்திற்கு எதிராக முன்னணியில் உள்ள பெரியவர்களைப் பாதுகாத்து, அவர்களது உயிர்களை காப்பாற்றும். அதே நம் வாழ்வை பாதுகாக்கும் காற்று பைகள் (airbags) ஒரு 10 வயது குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு தண்டு வடதில் சில கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காற்று பைகள் (airbags) குழந்தைகளுக்கு ஆபத்தானவை. எனவே உங்கள் குழந்தையை முன் இருக்கையில் அமர வைக்காமல், உங்கள் அருகில் பின் இருக்கையில் அமர வைப்பது சிறந்தது.

    Next Story
    ×