search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையை தலையணையில் படுக்க வைக்கலாமா?
    X

    குழந்தையை தலையணையில் படுக்க வைக்கலாமா?

    குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.
    குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்தநேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.

    தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும்.

    மூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome  ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, பீட்ஸ் போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.

     

    பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும். இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.

    குழந்தைகளுக்கான தலையனை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
    Next Story
    ×