search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்
    X

    குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்

    ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
    ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

    வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.

    தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

    * அடையாள அட்டை
    * இருப்பிட சான்றிதழ்
    * திருமண சான்றிதழ்

    * தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.

    * குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).

    * சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.



    * தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.

    * தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

    * இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.

    * தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.

    * தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.

    * விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். 
    Next Story
    ×