search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    5 வயது குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய மனரீதியான வளர்ச்சித்திறன்
    X

    5 வயது குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய மனரீதியான வளர்ச்சித்திறன்

    அந்தந்த வயதிற்கான வளர்ச்சி குழந்தையிடம் சீராக இருக்கிறதா என்பதை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
    'குழந்தை பிறந்தது முதல், அவர்களை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இன்னொரு பக்கம், குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் இயல்பாகவே பல்வேறு திறன்களையும் கற்றுக்கொள்கிறார்கள். இத்திறன்பாடுகள் 'வளர் மைல்கற்கள் (Developmental Milestones)' என குறிப்பிடப்படுகிறது.

    அந்தந்த வயதிற்கான வளர்ச்சி குழந்தையிடம் சீராக இருக்கிறதா என்பதை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய மனரீதியான வளர்ச்சித் திறன்களை இங்கு பட்டியலிடுகிறார்.

    ''நான்கு வயதுக் குழந்தையிடம் எதிர்பார்க்கக்கூடிய திறன்கள்...

    * பேசும்போது சில நேரங்களில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு வாக்கியங்களை உபயோகிக்கும்.

    * கைகளை உயர்த்தி பந்தை மேலே வீசும்.

    * எண்ணிக்கை பற்றி புரிந்துகொள்ளும். அதாவது, 'உனக்கு ரெண்டு சாக்லெட்தான்'என்றால், அதைப் புரிந்துகொள்ளும். சில எண்களும் தெரிந்திருக்கும்.

    * ஒருவரை வரைய முயற்சி செய்கையில் குறைந்தது இரண்டு உடல் பாகங்களையாவது வரையத்தெரிந்திருக்கும்.

    * நேரத்தைப் பற்றி தெளிவாகப் புரியத்துவங்கி இருக்கும்.

    * கற்பனைத் திறன் இருக்கும். விளையாட்டில் கற்பனைக்கு வடிவம் கொடுக்கத்தெரியும்.

    * நீளமான வாக்கியங்கள் ஆனாலும் புரிந்துகொள்ளும். உதாரணமாக, 'குளிச்சுட்டுசொக்கா போட்டுட்டு வந்தா, வெளியே போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரலாம்' என்றால் குஷியாக குளிக்கச் செல்லும்.



    ஐந்து வயதில்...

    * பாலினம் பற்றி தெரிந்துகொள்ளும். தான் ஆண்/பெண் என்பது புரியும்.

    * பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை எண்ணத் தெரியும்.

    * பெயரையும், முகவரியையும் கற்றுக்கொடுத்தால், அதைச் சொல்லத் தெரியும்.

    * உதவியின்றி உடையணிய மற்றும் களையத் தெரியும்.

    * ஃபோர்க், ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தத் தெரியும்
    * குதித்து விளையாட, குட்டிக்கரணம் போட, ஊஞ்சலாட தெரியும்.

    * கதை சொல்லத் தெரியும்.

    இந்த இயல்பான நடவடிக்கைகளில் இரண்டு, நான்கு மாத தாமதம் நேரலாம். ஆனால், இயல்புக்கு மீறிய தாமதம் அல்லது முடக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம்!"
    Next Story
    ×