search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம்
    X

    குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம்

    அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு.
    உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையோ அல்லது அண்ணன், அக்கா ஆகியோருடைய குழந்தையோ நிச்சயம் இருக்கும். அப்படி இந்தகுழந்தைகள் கைக்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பால் மட்டும் தான் உணவாக வழங்கப்படும்.

    ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும் அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.

    அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    அசைவத்தில் முதலில் குழந்தைக்கு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள். குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்பே அசைவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.



    முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் அசைவம் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.

    சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.

    ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.  
    Next Story
    ×