search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
    X

    குழந்தைகளை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு

    மாசுபாடு காரணமாக குழந்தைகளின் மூளையின் செயல்திறன், நினைவாற்றல், கற்றல்திறனுக்கு பங்கம் ஏற்பட்டு விடும்.
    காற்று மாசுபாடு பிரச்சினை டெல்லியை மட்டும் உலுக்கவில்லை. இந்தியாவிற்கே தலையாய பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. 

    அதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுவின் அளவை மதிப்பிட செயற்கைக்கோள் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெற்காசிய நாடுகளில் 1 கோடியே 22 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஆப்பிரிக்க நகரங்களும் தப்பவில்லை.

    ஏற்கனவே காற்று மாசு காரணமாக ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாச நோய் பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போது குழந்தைகளின் மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ‘மாசுபாடு காரணமாக குழந்தைகளின் மூளையின் செயல்திறன், நினைவாற்றல், கற்றல்திறனுக்கு பங்கம் ஏற்பட்டு விடும். மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் போனால் வரும் ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்றும் யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குழந்தைகள் பிரயாணம் செய்யும்போது காற்றை வடி கட்டுவதற்கு ஏதுவாக ‘மாஸ்க்’ அணிந்து பயணிப்பது நல்லது.
    Next Story
    ×