
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டன. அவற்றில் ஈடுபட்ட கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே கோவையை சேர்ந்த முகமது ரபீக் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தேன்.
அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோர்ட்டு தலையிட்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “இடைத் தேர்தலை ரத்து செய்ய முடியாது” என்று கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.