நெல்லை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை தாயகம் அலுவலகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைச்சாமி தலைமையில் உயர்நிலைக்கூட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்தாலோசித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.