search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    மதுரை:

    சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கிபட்டுடுத்தி நேற்று தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

    மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்றனர். மதுரையில் மூன்று மாவடியில் இன்று காலை 6  மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபா ராதனை காட்டியும் அழ கரை மதுரை மக்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவ ருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    நாளை காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார்.

    பின்னர் சித்ரா பவுர் ணமி தினத்தன்று முக்கிய நிகழ் வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதற்காக லட்சக்க ணக்கான பக்தர்கள் மதுரையில் இப்போதே குவியத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளை யும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மேற் கொண்டு வருகிறது.

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது.

    மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநா ளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்ம னுக்கு மங்கலநாண் அணி விக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

    அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

     தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி-அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

     தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீ சார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொண்டனர்.

    திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்ப டுத்தினர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத் தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (22-ந்தேதி) உச்சிகங காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    • திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி:

    மலைக்கோட்டை தாயுமானவ சாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷே கமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினா வதிக்கு அவளது பேறுகா லத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

     6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவி லில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானவ சாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

     இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவா ரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.
    • தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார்.

    உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

    சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்தில் இருந்து நீக்கியதுடன் கோவிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார்.

    அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம்.

    அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

    63 நாயன்மார்களை போலவே சைவ மரபில் சந்தான குரவர்கள் என்று நால்வரைச் சொல்வார்கள். அதில் உமாபதி சிவாச்சாரியார் ஒருவர். அவர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கொற்றவன்குடி என்னும் சிற்றூரில் அவதரித்தவர்.

    இவருக்கு சிதம்பரம் கொற்றவன் குடி தோப்பில் திருமடம் இருக்கிறது. நடராஜர் தரிசனத்தின் போது கவிக்கொடி ஏற்றியவர்.

    இன்று அவருடைய குருபூஜை என்பதால், அவருடைய திருமடத்தில் உமாபதி சிவாச்சாரியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பன்னிரு திருமுறை பாடல் ஓதுதலும் நடைபெறும். இன்றைய தினம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மங்கள நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மணிவாசகப் பெருமானுக்கு திருவுருவக்காட்சி தந்த தலம் இந்த தலம். சொக்கலிங்க பெருமாள் பார்வதிதேவியை பரதவர் குலத்தில் பிறக்கும் படியாக சபித்து சாப விமோசனமாக இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்து கொண்டு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக புராண வரலாறு. எனவே, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டியே இங்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • ஸ்ரீ கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர் சேவை.
    • உமாபதி சிவாசாரியார் குரு பூஜை

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-9 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 4.20 மணி வரை பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 8.50 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர் சேவை. திரிசிராமலை ஸ்ரீ தாயுமானவர். கடையம் ஸ்ரீ வில்வவனநாதர், சங்கர நயினார் கோவில் ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமாள், திருக்கடவூர் ஸ்ரீஅமிர்த கடேசுவரர் தேரோட்டம், உமாபதி சிவாசாரியார் குரு பூஜை, மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர், ஆறுமுகமங்கலம் ஆயிரததொன்று விநாயகர் தேரோட்டம், திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திறமை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-கணிப்பு

    கடகம்-செல்வம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-உறுதி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- தாமதம்

    மகரம்-நற்சொல்

    கும்பம்-பயணம்

    மீனம்-உவகை

    • திருத்தணி, முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும்.
    • தேரோட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம்,

    வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மரத்தேரினை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா அரோகரா என்ற கோஷம் மலைக்கோவில் முழுவதும் பக்தி மயமாக காட்சி அளித்தது.

    கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 23-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுராந்தக சுவாமி, திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உற்சவ மூர்த்திகளான நாகவல்லி சமேத நாகேஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    • அக்னி கேளி எனப்படும் தூத்தேரா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சடங்கு நடத்தப்படுகிறது.

    மங்களூரு ரவி போசவனிக்கே அருகில் உள்ள கடேல் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் 'அக்னி கேளி' எனப்படும் தூத்தேரா' நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்தேரா' அல்லது 'அக்னி கேளி' என்று அழைக்கப்படும் தீ சடங்கு துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

    துர்காபரமேஸ்வரி கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் கடேலில் உள்ள பழமையான ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் ரவி போசவ விழாவின் ஒரு பகுதியாக, ஆத்தூர் மற்றும் கோடேத்தூர் ஆகிய இரு கிராம பஞ்சாயத்து மக்கள், கடவுளை சாந்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியினை கடைபிடித்து வருகின்றனர்.

    இந்த திருவிழா சுமார் 8 நாட்கள் நடைபெறும். அதன் முக்கிய பகுதியாக அக்னி கேளி நடத்தப்படுகிறது.

    இந்த அக்னி கேளி என்பது பனை ஓலையை தீயிட்டு எரித்து அதனை எதிர் குழுவினர் மேல் வீசப்படும். அதாவது இரு கிராமத்தை சேர்ந்த மக்கள் நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும், இந்த சடங்கின் போது, தீயிட்ட பனை ஓலையை ஒருவருக்கொருவர் மீது வீசுவார்கள்.

    இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். அதன் பின்னர் சடங்கு நிறுத்தப்பட்டு இரண்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிகழ்ச்சியின் போது ஆண் பக்தர்கள் மேலாடை இன்றி கலந்துகொள்வார்கள்.

    இந்த அக்னி கேளி என்பது தீய மனசாட்சியைத் தடுக்கவும், அக்னிப்ரியா துர்காபரமேஸ்வரியை மகிழ்விக்கவும் ஒரு அடையாள சைகையாகும். இதுவரை இந்த விழாவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

    இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள தொலைதூர கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கிராம மக்கள் அம்மனுக்கு ஊர்வலம் எடுத்து, ஒரு குளத்தில் நீராடுவார்கள். அதன் பின் இந்நிகழ்வு நடைபெறும்.

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
    • கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் இரு வேளைகளில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வீரராகவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பனகல் தெரு, குளக்கரை வீதி, பஜார் வீதி, வடக்குராஜ வீதி, மோதிலால் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

    இந்த விழாவில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-வது நாளான வருகிற 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நடக்கிறது. 10-வது நாளான 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
    • கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.

    சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.

    10 டன் எடையில் வண்ண மலர்கள்

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்

    சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.

    5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

    • குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

     வலிதாயநாதர் கோவில்:

    சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோவில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இந்த கோவில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

     தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோவில்:

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

     மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்:

    மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோவில். இந்த கோவில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

     காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:

    நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோவில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

     திருச்செந்தூர் முருகன் கோவில்:

    அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

     வல்லநாடு கைலாச நாதர் கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோவில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலே கூறிய கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.

    ×