search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது
    X

    மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது

    வில்லியனூர் அருகே மங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந் தேதி நடக்கிறது.
    வில்லியனூர் கொம்யூன் மங்கலம் கிராமத்தில் ஸ்ரீமகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. மிருத்யுஞ்ஜெயர் சிவபெருமானின் அம்சங்களில் ஒன்றாவார். 4 அமிர்த கலசங்களுடன் தோன்றி மக்களின் தீராத நோய்களை தீர்த்தும், எமபயத்தை நீக்கியும், தீய சக்திகளால் ஏற்படும் துன்பங்களை விலக்கியும் அருள்பாலிப்பவர்.

    முதல் முறையாக மிருத்யுஞ்ஜெயருக்கு வில்லியனூர் கொம்யூன் மங்கலம் கிராமத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை மறுநாள் (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக பூஜைகளை திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தான தலைமை சிவாச்சாரியார் சரவண குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்கள் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. 
    Next Story
    ×