search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?
    X

    லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?

    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள்.
    லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுகம் போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, உடல்நலமுள்ள நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம்.

    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.



    தேவர்கள் ஸ்ரீதேவியை வணங்கி ''தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு லட்சுமி தேவி “எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து நாம ஸ்மரணம் செய்கின்றனரோ, எங்கு காலை வேலைகளில் வீட்டு வாயிலில் சாணி தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ, எங்கு ஆசாரம் கடைபிடிக்கப்படுகிறதோ, எங்கு ஸ்வதர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு இருப்பேன்” என்றாள்.

    யாரிடம் லட்சுமி தங்கமாட்டாள்? கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் கூறுபவர், சந்தியா காலத்தில் உண்பவர், மயிர், கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப்பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், மாத்ரு, பித்ரு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள். 
    Next Story
    ×