search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் சித்திரை திருவிழாவில் சாமி வீதிஉலா
    X

    காரைக்கால் சித்திரை திருவிழாவில் சாமி வீதிஉலா

    காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொக்கநாதர், ஏழை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
    காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொக்கநாதர், ஏழை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் ஏழைமாரியம்மன், சொக்கநாதர், காத்தவராயனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி 3 நாட்கள் சாமி வீதிஉலா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு விசேஷ அலங்காரத்தில் ஏழைமாரியம்மன், சொக்கநாதர், காத்தவராயன் சாமி வீதிஉலா நடந்தது. குட்டைக்கரை தெரு, நித்தீஸ்வரம், எம்.எம்.ஜி நகர், வி.ஜி.நகர், முல்லைநகர் உள்ளிட்ட வீதிகள் வழியாக நேற்று அதிகாலை பி.கே சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னுசாமி வாய்க்கால் தெரு, புனிதவதியார் வீதி, அன்புநகர், வேட்டைக்காரன் வீதி, பாரதிதாசன் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதிஉலா நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்கள் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா, நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×