search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

    நாகர்கோவில் அருகே மேலக்காட்டுவிளை ஊர் கைலாசநாதர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே மேலக்காட்டுவிளை ஊர் கைலாசநாதர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல்நாள் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம், 11 மணிக்கு சாமிகளுக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம், மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு சாமி பவனி வருதல், அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 27-ந் தேதி காலை 6 மணிக்கு சாமிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு காணியாளர் சாமிக்கு உச்சகால அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு காணியாளர் சாமி பஞ்சவாத்தியங்கள் முழங்க வாகனத்தில் பவனி வருதல், நள்ளிரவு 1 மணிக்கு வில்லிசை, 28-ந்தேதி காலை 6 மணிக்கு பொங்கல் வழிபாடு, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு வழங்குதல், இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 11 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மேலக்காட்டுவிளை ஊர் நிர்வாக தலைவர் வக்கீல் செல்வகுமார், உதவி தலைவர் திருநாமச் செல்வன், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஊர் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×