search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக  பவளக்கனிவாய் பெருமாள் 16-ந்தேதி புறப்பாடு
    X

    மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக பவளக்கனிவாய் பெருமாள் 16-ந்தேதி புறப்பாடு

    திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக பவளக்கனிவாய் பெருமாள் 16-ந்தேதி புறப்படுகிறார். அவரோடு தெய்வானையுடன் முருகப்பெருமானும் புறப்படுகின்றனர்.
    மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி மீனாட்சி அம்மனின் அண்ணனாக கலந்துகொள்வதற்காக வருகிற 16-ந்தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். அவர் தனது கையில் கென்னடி சுமந்து வருகிறார்.

    இதே சமயம் தனது தாய்-தந்தையின் திருமணத்தை கண்டுகளிப்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசாமியும் புறப்பட்டு வருகின்றனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து சாமியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.



    இதனையடுத்து 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு 4 நாட்கள் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலிலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பிறகு 19-ந்தேதி பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனியாக எழுந்தருளி புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றத்தை நோக்கி வருவார்கள்.

    அப்போதும் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் வழிநெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்கண்கள் அமைக்கப்பட்டு சாமியை வரவேற்று பக்தர்கள் வழிபடுகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×