search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடியாத்தத்தில் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்கம்பம் நடும்விழா
    X

    குடியாத்தத்தில் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்கம்பம் நடும்விழா

    குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் பால்கம்பம் நடும் விழா நடைபெற்றது.
    குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் பால்கம்பம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரமும், ஆராதனையும் நடத்தப்பட்டது. பின்னர் பால்கம்பத்திற்கு பால் அபிஷேகமும் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் திருமகள், ஆட்டோ மோகன், எம்.என்.பாஸ்கரன், ஏ.எல்.எஸ்.முருகன், ஆர்.ஜி.எஸ்.ரவி, ஆர்.கே.மகாலிங்கம், முன்னாள் அறங்காவலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வடிவேல்துரை, ஊர் தர்மகர்த்தா எம்.குப்புசாமி, நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் கோபாலபுரம்வாசிகள், இளைஞரணியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    விழாவையொட்டி வருகிற ஏப்ரல் 30-ந் தேதி காப்பு கட்டுதலும், மே மாதம் 11-ந் தேதி அம்மன் திருக்கல்யாணமும், 14-ந் தேதி தேரோட்டமும், 15-ந் தேதி கெங்யைம்மன் சிரசு ஊர்வலமும், 17-ந் தேதி புஷ்ப பல்லக்கு வீதி உலாவும் நடைபெறுகிறது.
    Next Story
    ×