search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மையநாயக்கனூரில் கோவில் திருவிழா: சேஷ வாகனத்தில் அம்மன் ஊர்வலம்
    X

    அம்மையநாயக்கனூரில் கோவில் திருவிழா: சேஷ வாகனத்தில் அம்மன் ஊர்வலம்

    அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் சேஷ வாகனத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அம்மன் சேஷ வாகனத்தில் அம்மையநாயக்கனூரில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று அம்மனை வழிபட்டனர்.

    முன்னதாக முத்துமாரியம்மன் கோவில் முன்பு இரவு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்து இருந்தனர். ஆனால் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டும், அனுமதி இல்லாமல் தேர்தல் நேரத்தில் எப்படி நடத்தலாம்? என கூறி தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஆடல்-பாடல் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×