search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 10-ந்தேதி வரை நடக்கிறது
    X

    மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 10-ந்தேதி வரை நடக்கிறது

    சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் மார்ச் 31-ந்தேதி தொடங்கிய பங்குனி பொங்கல் உற்சவ விழா 10-ந்தேதி வரை நடக்கிறது.
    சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா மார்ச் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10-ந் தேதி வரை நடக்கிறது.

    ஏப்ரல் 7-ந் தேதி பொங் கல் விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி முப்பிடாரி அம்மன் கோவில் முன் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், 8-ந் தேதி கயிறு குத்து திருவிழாவும் நடக்கிறது.

    10-ம் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அம்பிகை ரதம் எழுந்தளும் நிகழ்ச்சி, 10-ந் தேதி மாலை தேரோட்டம் முக்கிய ரத வீதிகளில் நடைபெறுகிறது.

    தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், காமதேனு, கைலாசபர்வதம், வேதாளம், வெள்ளி ரி‌ஷப வாகனம், பல்லக்கு, யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    12-ந் தேதி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின் முறை மகமை பண்டுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வரு கிறது.

    திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான சக்தி மாரியம் மன் கோவிலில் 44-வது பங் குனி பொங்கல் திருவிழா 31-ந் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான 7-ந் தேதி பொங்கல் திருவிழாவில் அம்மன் காளிங்கன் அவதாரத்துடன் நகர்வலம் நிகழ்ச்சியும், 9-ந் தேதி முளைப்பாரி ஊர்வல மும், 10-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனம் கஜலட்சுமி அவாதாரம், புஷ்ப அலங்காரம், சிவ பூஜை அலங்காரம், சுய ரூபம் அவதாரம் என பக்தர் களுக்கு காட்சியளிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை, சென்னை வாழ்திருத்தங்கல் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×