search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒற்றுமையை தரும் பாத யாத்திரை
    X

    ஒற்றுமையை தரும் பாத யாத்திரை

    மனிதனின் உலக பற்று மீதான அபரிமிதமான ஆசைகளை விலக்கி அமைதியான, மகிழ்ச்சியான தெய்வீக தன்மையுடன் கூடிய வாழ்வை பெற பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
    பழனி ஒரு புண்ணிய பூமி. சித்தர்கள் வாழ்ந்த இடம். அங்கு அழகும், இளமையும் கொண்ட தண்டாயுதபாணி என்ற முருகன் சிலையை மலை உச்சி மீது பதினெட்டு சித்தர்களின் ஒருவரான ‘போகர்’ என்ற சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    சங்க இலக்கியங்களில் முருகனின் முக்கியமான ஆலயங்கள் உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திருப்பரங்குன்றம், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், திருச்சீரலைவாய் மற்றும் பழமுதிர்சோலை போன்றவை. இவற்றில் நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம், தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது பழனி. மிக்க அழகுடைய தங்க தேர், தங்கமயில் வாகனம் ஆகியவை உள்ள தலமாகும்.

    தேவர்களை துன்புறுத்தி வந்த சூரனை அழித்து. கிரவுஞ்சி மலையையும், தனது வேலினால் உடைத்து தேவர்களை முருகன் காப்பாற்றினார். அந்த வெற்றியை கொண்டாட இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து தந்தார். அதற்கு பின்னரே முருகன் வாழ்வில் வள்ளி வந்தார்.

    அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் முருகனிடம் நிறைவு தீட்சை பெற்று மரணமில்லா பெருவாழ்வு எய்தினர். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிணாமத்திற்கு மாற்றிக் கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்து காட்டியதால் பெம்மான் முருகன் பிறவான், இறவான் என்று அருணகிரிநாதரால் பாட பெற்றார்.

    பாத யாத்திரை என்ற நடைபயணம் அதில் ஒரு மார்க்கம். கடவுளின் அருளை பெறுவதற்காக பாதயாத்திரை செல்கின்றனர். தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உள்ளன. முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற கந்தனை மக்கள் வணங்கி செல்கின்றனர். மேலும் பாத யாத்திரையின்போது ஏற்படும் மனஉறுதி உடலுக்கும் வலிமை சேர்கிறது.

    மனிதனின் உலக பற்று மீதான அபரிமிதமான ஆசைகளை விலக்கி அமைதியான, மகிழ்ச்சியான தெய்வீக தன்மையுடன் கூடிய வாழ்வை பெற பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். ஒரு மனிதன் நற்பண்புகளை பெற்று தெய்வ பக்தி பெற பாதயாத்திரை வழிவகை செய்கின்றது. குறிப்பாக கிராமங்களில் ஒற்றுமையுடன் கூடிய சமூக வாழ்க்கையை கடைபிடிக்க இது பெரிதும் உதவுகிறது. நிலையற்றதே இந்த வாழ்க்கை என்ற தத்துவத்தை புரிந்து கொள்ள உதவுகின்றது. 
    Next Story
    ×