search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி அளித்ததையும் படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி அளித்ததையும் படத்தில் காணலாம்.

    சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நாளை நடக்கிறது

    பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.
    பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகல் 12.45 மணியளவில் சேவல் கொடியேற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள், படிக்கட்டுகள் வழியாக கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×