search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதல் நாளை நடைபெறுகிறது
    X

    கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதல் நாளை நடைபெறுகிறது

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ் மிக்க கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ் மிக்க கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டும் தோறும் மிக சிறப்பாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல், 6 மணிக்கு தோரணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் இரவு பரிவட்டம் கட்டுதல், திருக்கல்யாண வைபோகம், பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல், அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். பின்னர் மாலை 4 மணிக்கு தேர் திருவிழா நடைபெறுகிறது. குண்டம் விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு குண்டம் இறங்க உள்ளனர்.

    இதற்காக திருப்பூர், ஊத்துக்குளி, அவினாசி, குன்னத்தூர், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருவிழாவில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×