search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் விழா
    X

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் விழா

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் விழா வருகிற 13-ம்தேதி புதன்கிழமை முதல் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13-ம் தேதி புதன்கிழமை முதல் 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சைவம், தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சுஹஸ்ர கலசாபிஷேகமும், ஸ்ரீ ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் பல்வேறு வைபவங்கள் நடைபெற உள்ளது.

    விழா சிறப்பாக நடைபெற கடந்த மாதம் 22-ந் தேதி வெள்ளிக்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

    வருகிற 13-ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோ‌ஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவ ராசிகளின் நலன் வேண்டி கோமாதா திருக்கல்யாணமும், கணவனுடைய ஆயுள் தீர்க்கம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், சவுபாக்கியுங்கள் கிடைக்க வேண்டியும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டி 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும், வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் சமஷ்டி உயநயனமும் நடைபெறுகிறது.

    துளசி செடி - நெல்லி செடி திருக்கல்யாணம்

    14-ந் தேதி வியாழக்கிழமை மஹா விஷ்ணு - மஹாலஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி - நெல்லிராஜா (துளசி செடி - நெல்லி செடி) திருக்கல்யாணமும், 108 கன்னிப்பெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜையும் நடைபெறுகிறது.

    வேம்பு மரம் - அரச மரம் திருக்கல்யாணம்

    15-ந் தேதி வெள்ளிக்கிழமை இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலஷ்மி - அஸ்வத் ராஜா (வேப்ப மரம் - அரச மரம்) திருக்கல்யாணமும், ஆண் - பெண் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் நடைபெறும்.

    16-ந் தேதி சனிக்கிழமை நோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்க்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மை அடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும் 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர் கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியுடன் தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை ஸ்ரீதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது.

    ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவம்

    17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் முன்னிலையில், ‌ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில்ஒரே நேரத்தில் ‌ஷண்மத பீடத்தில் ஷோடச 16 திருக்கல்யாண மஹோத்சவம் திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன், இறைவி அருள் பெறவும் நடக்கிறது.

    16 தெய்வங்களுக்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 16 தெய்வ திருமணங்களுடன் இதர வைபவங்கள் சிறப்புடன் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட எராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
    Next Story
    ×