search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×