
இதையொட்டி நேற்று காலை கோவில் நிர்வாகத்தின் சார்பாக இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். பூத்தட்டுகளுக்கு கோவில் குருக்கள் சாமிநாதன் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தார். இதையடுத்து ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பின்னர் சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தட்டுகள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.