
அதேபோல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் விநாயகர் வீதிஉலா, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, சுவாமி சந்திர சேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா நடந்தது. மேலும் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
9-ம் திருநாளான கடந்த 21-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்றுமுன்தினம் காலை பஞ்சமூர்த்திகள் ரதவீதிகளில் ஊர்வலம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி சந்திர சேகரர், மனோன்மணி அம்பிகை எழுந்தருளி 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் உவரி, திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.