
மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.