search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவிலில் மார்கழி மாதத்தில் பூஜை நேரம் மாற்றம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் மார்கழி மாதத்தில் பூஜை நேரம் மாற்றம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மார்கழி மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறப்பு, 2.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் திருநாளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×