search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது
    X

    நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது

    திருநெல்வேலியில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து, இராப்பத்து திருவிழா தொடங்கியது. 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், 7வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திரு அத்யயன உற்சவம் (பகல்பத்து, இராப்பத்து திருவிழா) நேற்று தொடங்கியது.

    காலையில் சுவாமி உடையவர் சன்னதியில் இருந்து ஆச்சாரியார்களுடன் புறப்பட்டு, சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி அருளிப் பாடு பெற்று, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் நாச்சியார், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினர். பின்னர் திருப்பல்லாண்டு அரையர்சேவை நடந்தது.

    பகல்பத்து திருவிழா திருமொழி திருநாளாகவும், இராப்பத்து திருவிழா திருவாய்மொழி திருநாளாகவும் கொண் டாடப்படுகிறது. பகல்பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் பெருமாள் நாச்சியார் ஆஸ்தானத்தில் இருந்து அலங்கார வாத்தியங்களுடனும், சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தான த்தில் இருந்து தாலாட்டு வாத்தியங் களுடனும் எழுந்தருளுகின்றனர். தினமும் அரையர் சேவையாக சென்னி யோங்கு, திருப்பாவை, ஊனேறு செல்வம் போன்றவை நடைபெறும்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இரவில் சொர்க் கவாசல் திறக்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 29-ந்தேதி சுவாமி நம்மாழ்வார் வீடு விடை திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், தக்கார் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×