search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருகார்த்திகை திருவிழா  தொடக்கம்
    X

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருகார்த்திகை திருவிழா தொடக்கம்

    முருகனின் 4-வது படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருகார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் 4-வது படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் திருகார்த்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருகார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினார். இதையடுத்து கொடியேற்றப்பட்டது. பின்னர் சுப்பிரமணியர் பரிவார தெய்வங்களுடன் மலை கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை சுப்பிரமணியர் படிச்சட்டம், பல்லக்கு, பூத வாகனம், ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி திருகார்த்திகை அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×