search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?
    X

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?

    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம்.
    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.

    திருமஞ்சணை பிரசாத மகிமை

    குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும்.

    அன்னதானம்

    குலசை முத்தாரம்மன் கோவிலில் மதியம் தினமும் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.

    நோய் தீர்க்கும் வேப்பிலை

    குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மாவிளக்கு பூஜை

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
    Next Story
    ×