search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த காட்சி.
    X
    திருப்பதி கோவில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த காட்சி.

    திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    திருப்பதி பிரமோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு வராகசாமி கோவில் முன்பாக வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதையடுத்து மாடவீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட சக்கரத் தாழ்வார் தெப்பகுளத்தில் வேதவிற்பண்ணர்கள் வேத மந்திரங்கள் ஓத தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை காண லட்சகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தெப்பகுளத்தின் அருகில் காத்திருந்தனர்.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் அனைத்து பக்தர்களும் தெப்பகுளத்தில் நீராடினர்.

    சக்கர ஸ்நானத்தை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழச்சி நடைபெறும். இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

    அடுத்த மாதம் 10-ந் தேதி, நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி, 18-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×