search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார்.
    X
    திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார்.

    திருப்பதி பிரம்மோற்சவ விழா - சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவின் 6-வது நாள் மாலை தங்கதேரில் மலையப்பசாமி வீதிஉலா வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவின் 6-வது நாள் மாலை தங்கதேரில் மலையப்பசாமி வீதிஉலா வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு தங்க யானை வாகனத்தில் மாட வீதிகளில் மலையப்ப சாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், மாடவீதிகளில் உலா வருகிறர். இரவு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. இரவில் குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வருகிறார்.

    நாளை மறுதினம் சக்கரத் தாழ்வார் தீர்த்த வாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.
    Next Story
    ×