search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம்.
    X
    நாகராஜா கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக திகழ்கிறது. நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைக்கு தனி சிறப்பு உண்டு. அன்றைய தினம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமியை வழிபடுவார்கள்.

    அதே போல இந்த ஆண்டும் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டனர். அதிலும் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் நாகராஜருக்கு அபிஷேகங்கள் தொடங்கின. கோவில் நடை திறப்பதற்கு முன்பாகவே ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலில் குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவே கோவிலுக்கு வந்துவிட்டனர். சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்து இருந்தனர்.

    நாகராஜா கோவிலில் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் வழக்கமான நேரத்தில் கோவில் நடை அடைக் கப்படவில்லை. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகே நடை அடைக்கப் பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
    Next Story
    ×