search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா 17-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா 17-ந்தேதி தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி லட்சார்ச்சனை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி லட்சார்ச்சனை விழா வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் மாலை 5.30 மணிக்கு மேல் ஆடி லட்சார்ச்சனை தொடங்குகிறது.

    அதே போல் தினசரி 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம் 25 நாட்கள் பெரியநாயகி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. அடுத்த நாள் பெரியநாயகி அம்மன் கோவிலில் புரஸ்சரண ஹோமமும், மகாஅபிஷேகமும் நடைபெறும்.

    ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரியநாயகி அம்மனுக்கு சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி வருகிற 20-ந்தேதி பெரியநாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரமும், 27-ந்தேதி மீனாட்சி அம்மன் அலங்காரமும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், 10-ந்தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடி லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×