search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா நாளை தொடங்குகிறது

    கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4 மணிக்கு நடை திறப்பு, 8 மணிக்கு அய்யா தர்மத்திற்கு செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படு கிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல், 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    15-ந்தேதி காலை உகப்படிப்பு, 6.30 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பவனி வருதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 7 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முளைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோவில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    பின்னர் 16-ந்தேதி காலை 4 மணிக்கு குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். 
    Next Story
    ×