search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வில் பெற்றி தரும் வாராகி
    X

    வாழ்வில் பெற்றி தரும் வாராகி

    ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். அதற்கு வழிகாட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வாராகி உபாசகர் சத்தியசீலன் குருக்கள் வாராகி பற்றிய தகவல்களை தருகிறார். படித்து பலன் பெறுங்கள்...

    ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ
    பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ
    சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ
    வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி

    “சர்வம் சத்திமயம் அவளின்றி இவ் வுலகில் எது ஜெயம்”-இவ்வுலகமே அவள் பிடியில் தான் இயங்குகிறது, நான்மறையும், நானிலமும், எண் திசையும் அவளின் அருளாட்சியை தான் போற்றி புகழ்கின்றது. அண்டத்தை காக்கதான் எத்தனை வடிவம்? அதில் வரும் பேராற்றலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆதிசக்தியாய் தோன்றி ஆதிசிவன், ஆதிநாரணன், ஆதிபிரம்மன் ஆகியோரை படைத்த தாய் பற்றி நான்மறை வேதம் போற்றும் புகழ் போதாது,போதாது.

    அன்னையவள் உலக உயிர்காக்க எடுத்த வடிவங்கள் சில. கொடுத்த வரங்களும் நலங்களும் பல,
    காஞ்சியிலே காமாட்சி
    மதுரையில் மீனாட்சி

    காசியிலே விசாலாட்சியாக, உருவெடுத்து உயிர் களை காத்தருள்பவள், வடிவங்களில் வகைகோடி இருந்தாலும் சக்தி என்ற வடிவின் நாயகி தான் அவள், வரங்களை அளிப்பதில் வரலெட்சுமியாய், கல்வியை அளிப்பதில் கலைமகளாய், வீரத்தை கொடுப்பதில் மலை மகளாய் வடிவெடித்து வையகத்தை வாழ செய்பவள்.

    சரி அவள் பெருமைகளை சொல்ல இந்த ஒரு ஜென்ம வாழ்நாள் போதாது சொல்லி கொண்டே போகலாம்.

    அனைத்திலும் அவள் உறைந்திருக்கிறாள், இறுதியில் அவளே கதி என் பதையும் அவளே முக்தி தரும் மூகாம்பிகா என்றும் நம்மை சொல்லால் சொல்ல வைத்து உணர்வால் உணர்த்துகிறாள் என் அன்னை.

    அவள் அவதாரம் மன்மத வருடம் கொண்டே தொடங்கியதை நான் உணர் வேன். அதை உங்களுக்கும் உணர்த்த நான் கடமைபட்டுள்ளேன்.
    யார் இந்த வாராகி?

    (1) சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் அன்னை.

    (2) பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.

    பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த வாராகி.

    வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.

    “எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்
    ஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”

    என கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலும் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.

    வாராகியின் வடிவம்

    வாராகி=வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவிடு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதாரம் எடுத்தாள்.
    மனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வேத தெய் வங்கள். இவர் களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.

    அதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மைக்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற்றலாய் காட்சியளிக்கிறாள். அவள் வடிவத்தை அழகாய் சொல்கிறது வாராகி மாலை:

    “இருகுழை கோமளம், தாள்புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணிநீலம் கைகோமேதகம் நகம் கூர்வ யிரம்
    திருநகைமுத்து கனிவாய் பவளம் சிறந்த வளல்லி
    மரகதநாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே-

    வாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளியுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.

    இவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடுக்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.

    அருள்காட்சி வடிவம்:-

    வாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.

    புவனேஸ்வரி மாதாவிற்கு யார் எதிரிகள்? அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடுபொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.

    வாராகிதேவியின் பிறப்பிடம் பூபுரம் என்று சொல்லப்படும் பதினாறாவது ஆவரணமாகும். இது லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீசக்ர மாகும். இது சிந்தாமணி கிருகத்தின் நுழைவுவாயில். இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட மாபெரும் கோட் டையில் அவதரித்து சூரிய சந்திரர்கள் முக்கோடி தேவர் களின் ஒட்டுமொத்த வடிவாகி சுடர்விட காட்சியளிக்கிறாள்.

    “ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.

    அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
    வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.

    வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
    வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
    வாராகி உதித்த மாதம்:-ஆடி
    வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
    வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
    வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
    வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
    பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.

    பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....

    ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,

    வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.

    இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே

    யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...
    Next Story
    ×