search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா நாளை தொடங்குகிறது
    X

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா நாளை தொடங்குகிறது

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவில் திருவாசகம் உரை அரங்கம், வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடத்தப்பட்டு, ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடுவார்கள். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபடுவார்கள். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வருவார்கள். பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை ஓலைகளால் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள். விழா நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    Next Story
    ×