search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவாடானை அருகே ஐய்யனார்  கோவில் புரவி எடுப்பு விழா
    X

    திருவாடானை அருகே ஐய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

    திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
    திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் ஐய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கடைசி நாள் திருவிழா வில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளை மாடுகள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு வீதி உலா வந்து கோவிலில் வைத்தனர்.

    இந்த வருடம் நல்ல மழை பொழிய வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும் என்று நேர்த்திக் கடனுக்காக மண்ணால் செய்த குதிரை மற்றும் காளைகளை கோவிலுக்கு வழங்குவதாக தெரிவித்தார்கள். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×