search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    400 ஆண்டுகள் பழமையான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    400 ஆண்டுகள் பழமையான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    வேண்டிய வரங்களை எல்லாம் தந்து அருள்பாலித்து வரும் முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டார் பகுதியில் செங்குந்த முதலியார் சமுதாய வடக்குத் தெருவில் பல நூறு ஆண்டுகளாக வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை எல்லாம் தந்து அருள்பாலித்து வரும் முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலையில் கணபதிஹோமம், மஹா பூர்ணாஉறத் வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, திசாஹோமம், சாந்தி ஹோமம், ஆகியவைநடந்தது.

    2-ம் நாள் காலைநவகிரக பூஜை, ஹோமம், சுதர்சன ஹோமம், தனபூஜை, கோ பூஜை, கஜ பூஜை, லெஷ்மி ஹோமம், தீபாரதனை, நடந்தது மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமம் ஆறாட்டுத் துறையில் இருந்து சிங்காரி மேளம் மற்றும் நாசிக்டோல் தாளத் துடன் யானை மீது புனித நீர் முளைப்பாரி கொண்டு வரப்பட்டது. மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜைகள் சோம கும்ப பூஜை, தோராண பூஜை, கலாகா உஷணம், கும்ப ஸ்தாபனம், வேதிகாரிச்சனை, ஹோமங்கள், திவ்யாஉற்திமகா பூர்ணாஉற்தி தீபாராதனை நடைபெற்றது.

    3-ம் நாள் இரண்டாம் கால யாகசால பூஜைகள், சூர்ய கும்ப பூஜை, வேதிகார்சனை, சூர்தாசிகள் ஜெபம், ஹோமங் கள் மகாபூர்ணாஉறித், திரு முறை பாராயணம் நடைபெற் றது. மாலை மூன்றாம் கால யாகசால பூஜை, சுமங்கலி பூஜை, பெண்களுக்கு மஞ்சள், மஞ்சள்கயிறு, குங்குமம், ஆகியன பிசாதமாக வழங்கப் பட்டது. தொடர்ந்து விநாயகர் கோவிலிருந்து சப்பாணி மாடன் சுவாமி சிலை எடுத்து, சிங்காரி மேளத்துடன் சமுதாய தெருக்கள் சுற்றி வந்து முத்தாரம்மன்கோவில் வந்தடைந்தது. இரவு 11மணிக்கு சிற்ப சாஸ்திர கிரியைகள் ஆரம்பமானது. ரத்தின நியாசம், எந்திர ஸ்தாபனம், நியோனம் மிலனம் விமான கலசம் பிரதிஷ்டை நடந்தது.

    இன்று (வெள்ளிக்கிழமை) நான்காம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள் ஸ்பர்ஸாஉற்த, மகாபூர்ணா உறிதி தீபாராதனை கடப் பிரதஉஷணம், காலை9.45க்கு மேல் 10.30மணிக்குள் ஸிம்உறாலக்னத்தில் குரு ஹோரையில் மூல ஸ்தான விமானம், மூல ஸ்தான மூர்த்திகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, கும்பாபிசேகம் நடந்தது.

    மஹோகும்பாபிசேகம், கோட்டார் செங்குந்த முதலியார் சமுதாய தலைவர் அறங்காவலர், வள்ளியானந் தம், பொன்னையா, இராஜவேல், மாடசாமி, வேலாயுதம், சுவாமிநாதன், சிவக்குமாரன், விழாக்குழு உறுப்பினர்கள் நீலகண்டன், ஜிவானந்தம், இராமசுப்பிர மணியம், காளிஸ்வரன், மீனாசிசுந்தரம், வேல்முருகன், மணிகன்டன் ஆகியோர் முன்னிலையில் ஒழுகினசேரி கிராமம் பாபு சிவாச்சாரியார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஸ்தானிகம்முத்து சுப்பிரமணிய பட்டர், காரைக் குடி கணபதி வைரவ சுப்பிரமணிய சிவாச்சாரியார், கோவை கல்யான சுந்தர சிவாச்சாரியார், வெங்கட்ராம சிவம், பெங்களூரு பரத்சிவாச் சாரியார், விக்னேஷ் சிவாச் சாரியார் கும்பாபிசேகத்தை நடத்தி வைக்கிறார்கள். மதியம் 12 மணிக்கு மகேஷ்வர பூஜையும் தொடர்ந்து அன்ன தானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சாயரஷ தீபாராதனை, திருக்கல்யாண வைபவம், தீபாராதனையும் காட்டப்படுகிறது.

    கும்பாபிஷேகம் முடிந்ததும் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. திருக் கல்யாண மூலஸ்தான கல்மண்டபம் செலவை பெங்களூரு முருகன்-வனஜா முருகன் தம்பதியரும், சப்பாணி மாடன் சுவாமி கோவில் சென்னை சேதுராமன் உஷாஜியும், செய்துள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோட்டார் செங்குந்த முதலியார் அறங்காவலர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், செங்குந்த முதலியார் சமுதாய மக்கள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×