search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்களும் குலதெய்வங்களும்
    X

    பெண்களும் குலதெய்வங்களும்

    பெண்கள் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
    பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

    பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்கக் கூடிய ஒரு ஆற்றலை தரும்.

    இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

    குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணியகாரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமானபோக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை . எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.

    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

    குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்கமுடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவைஎல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.

    இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான்தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம்வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம்சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்!

    எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேகஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள்நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை. அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள்வீட்டிலேயே குலதெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.

    வீட்டில் திருமணத்தடை, சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குலதெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்துகொள்வார்கள்.  குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்ததடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்டநேரம்தான் இதற்கெல்லாம் காரணம்.

    அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர்சக்திகளையும் அழிக்கும்வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும்.
    Next Story
    ×