search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன?
    X

    மங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன?

    ஏழரைச் சனியின் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. மங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஏழரைச் சனியின் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. பொதுவாக சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனியின் காலம் துவங்குகிறது. முந்தைய ராசி, ஜென்ம ராசி, அடுத்த ராசி என்று ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வீதம் இந்த மூன்று இராசிகளிலும் சனி சஞ்சரிக்கின்ற ஏழரை ஆண்டு காலமே ஏழரை நாட்டுச் சனி அல்லது ஏழரைச் சனி என்ற பெயரில் சொல்லப்படுகிறது.

    ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது பொங்குசனி என்றும், ஜென்ம ராசியை விட்டு அகன்று அடுத்த ராசியில் அமரும் காலத்தை மங்கு சனி என்றும் அழைப்பர்.
    Next Story
    ×