search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில் கிரி வீதியில் கிரிவலம் வரும் பக்தர்கள்.
    X
    பழனி முருகன் கோவில் கிரி வீதியில் கிரிவலம் வரும் பக்தர்கள்.

    பழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களும் ஆக 14 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தினசரி கிரிவலம் வந்து முருகனை தரிசனம் செய்து வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் கோவில், மலைக்கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சீதகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. தினசரி உச்சிக்கால பூஜையில் பல்வேறு அபிஷேகங்களுடன் சந்தன அபிஷேகம் அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி 14 நாட்கள் நடைபெறும்.

    அக்னி நட்சத்திர கழு திருவிழாவின் சிறப்பு பழனி மலைக்கோவிலை சுற்றி வலம் வருவதாகும். சித்திரை மாதத்தில் 7 நாட்கள் மாலை நேரத்திலும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்கள் காலையிலும் கிரிவலம் வருவது சிறப்பாக கருதப்படுகிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் தலையில் கடம்பம் பூக்களை சூடிக்கொள்வதும், கடம்ப மலர்களை கொண்டு வந்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

    நேற்று மாலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர். கிரி வீதிகளில் பல இடங்களில் பக்தர்களுக்காக கடம்பம் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. அக்னி நட்சத்திர கழு திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×