search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பஞ்சப்பிரகார விழா வசந்த உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பஞ்சப்பிரகார விழா வசந்த உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி அன்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம், கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.



    தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் 2-வது சுற்றும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் 3-வது சுற்றும், தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் 4-வது சுற்றும், கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதியில் 5-வது சுற்றாகவும் சுற்றி வந்து பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு கோவிலின் முதல் பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 14-ந் தேதி அம்மன் ரிஷப வாகனத்திலும், 16-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 17-ந் தேதி முத்துப்பல்லக்கிலும், 18-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கற்பக விருஷ வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×