search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆறாக ஓடிய அபிஷேக நீர்
    X

    ஆறாக ஓடிய அபிஷேக நீர்

    குக்கே சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
    கர்நாடகத்தில் உள்ள 7 பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக, தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் உள்ள சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது, இந்த ஆலயம். தாரகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ இந்த மலைக்கு வந்தார்.

    அவரை இந்திரன் முதலான தேவர்கள் வரவேற்றனர். அங்கேயே முருகர்-தெய்வானை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு புனித நதிகளில் இருந்து நீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது. குக்கே சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

    ஒரு முறை வாசுகி என்ற நாகப்பாம்பு, தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக, இந்த மலைப் பகுதியில் உள்ள பிலாத்வாரா குகையில் சிவனை நினைத்துத் தவம் இருந்தது. இதையடுத்து ஈசனின் ஆணைப்படி வாசுகியை இத்தலத்திலேயே தங்கியிருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இங்குள்ள வாசுகியை வழிபாடு செய்தால் முருகப்பெருமானுக்கு பூஜை செய்த பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் நிறுவப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

    மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் குக்கே சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. 
    Next Story
    ×