search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் கோவில்
    X

    தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் கோவில்

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்று நஞ்சுண்டேஸ்வரர் கோவில். இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என அழைக்கப்படுகிறது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்று நஞ்சுண்டேஸ்வரர் கோவில். இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என அழைக்கப்படுகிறது. உலகத்தை காக்க சிவபெருமான் நஞ்சை உண்டதால் அவருக்கு ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் 3-ம் நூற்றாண்டில் கங்கா வம்சத்து அரசர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்களைத் தொடர்ந்து ஒய்சாலர்கள், உடையார்கள் உள்பட பல்வேறு மன்னர்களால் இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. 7 நிலை ராஜகோபுரத்துடன் கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது. திப்புசுல்தான் இக்கோவிலுக்கு விலைமதிப்பற்ற மரகத லிங்கத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. மைசூருவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஞ்சன்கூடு பகுதியில், கபினி ஆற்றின் கரையில் அழகு ததும்ப இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு கபினி ஆறு, குண்டுலு, சங்கம் ஆகிய ஆறுகளுடன் சேருகிறது. இது ‘பரசுராமசேத்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமர் கோவில் உள்ளது. நஞ்சன்கூடுவுக்கு செல்பவர்கள் முதலில் இங்கு வந்து தரிசித்து விட்டு, பிறகு தான் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்கிறார்கள். நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ரத உற்சவம் நடைபெறுகிறது.
    Next Story
    ×