search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷ்ணு சிலையை படத்தில் காணலாம்.
    X
    விஷ்ணு சிலையை படத்தில் காணலாம்.

    ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய உள்ள 18 அடி நீள பிரமாண்ட விஷ்ணு சிலை

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிபட்டியை அடுத்த காம்பார்பட்டியில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய 18 அடி நீள பிரமாண்ட விஷ்ணு சிலை கொண்டு வரப்பட்டுள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிபட்டியை அடுத்த காம்பார்பட்டியில் ஆத்மலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 18 அடி நீளம் கொண்ட ஆதிசே‌ஷனில் லட்சுமி, பத்மாவதி தாயாருடன் பள்ளிகொண்ட மகாவிஷ்ணு சிலை பிரமாண்ட அளவில் தேனியில் தயார் செய்யப்பட்டு காம்பார்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    சிலுவத்தூரில் இருந்து ஊர்வலமாக சிலை கொண்டுவரப்பட்டு ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த கோவில் வளாகத்தில் விஷ்ணுவுக்கான கோவில் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டிட பணி முழுமை பெற்றவுடன் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படும். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 21 அடி நீள விஷ்ணுசிலை உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக இங்கு 18 அடி நீளமுள்ள விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தனர். இந்த பிரமாண்ட சிலையை சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×