search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரை திருவிழா: பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து 26-ந்தேதி புறப்படுகிறார்
    X

    சித்திரை திருவிழா: பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து 26-ந்தேதி புறப்படுகிறார்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில், தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சிக்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் 26-ந்தேதி புறப்படுகிறார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 27-ந்தேதி மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடக்கிறது.

    இதையொட்டி திருக்கல்யாணத்தின் முதல் நாளான 26-ந்தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு செல்லுகிறார். அதேவேளை திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரைக்கு செல்லுகிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் 125-க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    மறுநாள் 27-ந்தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில், பவளக்கனிவாய் பெருமாள் தனது தங்கையான மீனாட்சி அம்மனை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார். நிகழ்ச்சியில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்

    அதைத்தொடர்ந்து 4 நாட்கள் மதுரையில் தங்கி இருக்கும், பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் மே 1-ந்தேதி மாலை 5 மணிக்கு சிம்மாசனம், பூப்பல்லக்கில் எழுந்தருளி திருப்பரங்குன்றமான தங்களது இருப்பிடத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு கோவிலுக்கு வந்து சேருகின்றனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 
    Next Story
    ×