search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை)நடைபெறுகிறது.

    முன்னதாக இன்று (புதன்கிழமை) கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் இருந்து கோமதி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மேல் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×